எமலோகத்தில் இடமில்லை தயவு செய்து வீட்டிலிருங்கள்.! – தமிழக காவல்துறையின் புதிய ஐடியா.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் 5 ஆயிரத்து 700-ஐ தாண்டிவிட்டது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2வது மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இதனால், மாவட்டந்தோறும் ஊரடங்கு காவல்துறையினரால் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கின் போது வெளியில் வருபவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், எமலோகத்தில் இடம் நிரம்பிவிட்டது. இதற்கு மேல் இடமில்லை அதனால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எமன் பேசுவது போல உள்ளது. இந்த விளம்பர விழிப்புணர்வு பலகையை திண்டுக்கல் மாவட்ட தெற்கு பாக காவல் அதிகாரிகள் வைத்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.