தனது இரன்டு மனைவிகளையும் வெவ்வேறு ஊராட்சிகளில் தலைவராக்கிய கணவர்!

  • தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்றன. 
  • தனசேகர் என்பவர் தனது இருமனைவிகளையும் இரு ஊராட்சி மன்ற தலைவர்களாக வெற்றிபெற வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கு நேற்று இரவு தொடர்ந்து தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பல சுவாரசிய சம்பவங்கள் நிலகலந்துள்ளன. அதில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரு ஊராட்சிகளில் தனசேகர் என்பவர் தனது இருமனைவிகளையும் இரு வெவ்வேறு ஊராட்சிகளில் நிற்கவைத்து அவர்களை ஊராட்சி மன்ற தலைவர்களாக வெற்றிபெற வைத்துள்ளார்.

வழூர்-அகரம் ஊராட்சி மன்ற தலைவராக செல்வி தனசேகரனும், கோயில் குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக காஞ்சனா தனசேகரும்  வெற்றிபெற்றுள்ளார். தனசேகர் தனது இரு மனைவிகளுடனும் வழூரில் வசித்து வருகிறார். தனசேகரன் இதற்கு முன்னர் வழூர்-அகரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.