“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”கோஷத்தில் பவனி வந்த முருகன்..!திருப்பரங்குன்றத்தில் குமரனின் தேர் உலா..!!

த்மிழ் கடவுளான முருகப்பெருமானின் முதற்படை வீடாக கருதப்படும்  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8 தேதியே கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கியது.

Image result for திருப்பரங்குன்றம்

தொட்ர்ந்து  நடைபெற்று வரும் திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி  தங்க சப்பரத்திலும் இரவில் பல வேறு வாகனங்களில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளி நகரில் வீதி  உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் திருவிழாவின் 9ம் நாளான நேற்று காலை தெப்ப முட்டு தள்ளுதல் விழாவுடன் தை கார்த்திகை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முதலிய இசைக்கருவிகள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக தெப்பக்குளத்திற்கு வந்தார்.அவர் வந்தவுடன்  தெப்ப முட்டு தள்ளுதல் நடைபெற்றது.

Image result for திருப்பரங்குன்றம்

“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா …. வீரவேல் முருகனுக்கு அரோகரா“ என்ற பக்தர்களின்  பக்தி கோஷங்களுக்கு நடுவே சுவாமி உலா வந்த தேரை  வடம் பிடித்து இழுத்தனர்.

தேரானது கீழ ரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதி,தென்றலாய் மெல்ல, மெல்ல ஆடி ,வடக்கு ரத வீதி வழியாக தேர்  கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்.

author avatar
kavitha

Leave a Comment