தெப்போற்சவம் காணும் திருமலை…வெகுவிமர்சையாக தொடங்கியது

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  வருடாந்திர தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது.

திருமலையில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக மாசி மாத பெளா்ணமிக்கு தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான விழா நேற்று முதல் ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஏழுமலையான் தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது.

அதன் முதல் நாளான நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சீதா, லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமசந்திரமூா்த்தி ஐந்து முறை தெப்பத்தை வலம் வந்தாா். சுவாமி வலம் வரும் அற்புத நிகழ்விற்காக திருக்குளம் மற்றும் தெப்பம் 6 டன் மலா்களால் கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் திருமலை முழுவதும் வண்ணவண்ண மின்விளக்கு அலங்காரிக்கப்பட்டு உள்ளன. செய்யப்பட்டுள்ளன.தெப்போற்சவத்தை அடுத்து வசந்தோற்சவம், ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கர சேவை ஆகியவற்றை  தேவஸ்தானம் தற்போது ரத்து செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
kavitha