துணிவு Vs வாரிசு : வெளியான வெறித்தனமான அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் நடைபெறும் சம்பவங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த நிலையில், விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் வாரிசு படத்தின் ரிலீஸ் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், துணிவு படத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதனையடுத்து, துணிவு திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை  ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், படம் பொங்கல் அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரிசு, துணிவு ஆகிய படங்களுக்கு ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளியாகிறதா..? அல்லது ஒரு நாள் முன், பின் வெளியாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அது எப்படியோ இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் அஜித் -விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும், விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் – விஜய் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment