தவறான பொத்தானை அழுத்தியதால் விமானிக்கு மூன்று மாதம் சஸ்பெண்ட்!

கடந்த 8-ம்  தேதி டெல்லியில் இருந்து காஷ்மீரில்  உள்ள ஸ்ரீநகருக்கு  ஏர் ஏசியா விமானம் ஓன்று  புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானம் சென்று கொண்டு இருந்த போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது .இந்நிலையில் உடனடியாக  தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு  விமானி தகவல் கொடுக்க முயற்சி செய்தார்.

என்ஜினில் கோளாறு என்றால்  7700 என்ற சமிஞ்சை கோடை  அழுத்த வேண்டும். ஆனால் விமானி விமானம் கடத்தப்பட்டதாக கூறும் 75,000 கோடை  தவறுதலாக அழித்து விட்டார்.

Related image

இதனால் காஷ்மீருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி ஆனார்கள். அதன் பின்னர் கிடைத்த தகவல் படி விமானம் கடத்தப்படவில்லை என நிம்மதி அடைந்தனர்.

Related image

அந்த  விமானத்தை இயக்கிய ரவி ராஜீவுக்கு விமானப் போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்குஅந்த விமானி தனது தவறு குறித்து விளக்கம் கொடுத்தார்.ஆனால் அதில் திருப்தி அடையாத விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அந்த விமானனியை மூன்று மாதம் இடைநீக்கம் செய்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.