இதுக்குமேல் அவகாசம் கிடையாது., வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில் தவணை செலுத்தாதோரின் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா மற்றும் ஊரடங்கில் பொருளாதார நெருக்கடியாலும், நிதி சுமையாலும் தனிநபர்கள் நிறுவனங்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்ற வழக்கு விசாரணையின்போது, வட்டியை முழுமையாக தள்ளுபடி உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா கால வங்கிக்கடன் தவணை சலுகையை 6 மாதத்துக்கு மேல் நீடிக்க முடியாது என்று கூறிய, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஊரடங்கில் தவணையை திருப்பி செலுத்தாத நபர்களுக்கு வங்கிகள் விதித்த வட்டிக்கு வட்டி தள்ளுபடியானது என்றும் கொரோனா காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கொரோனா காலகட்டத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்டிருந்தால் திருப்பி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி கொள்கையில் தடையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்