#AndroidCrash:ஜிமெயில் ஏற்பட்ட பிரச்சனையால் தவிக்கும் பயனர்கள் முடங்கிய ஆண்ட்ராய்டு ..!

இன்று ஜிமெயில் உட்பட பல சேவைகள் பயன்படுத்த முடியாததால் ஆண்ட்ராய்டு பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியா உட்பட உலக அளவில் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது தொலைபேசியில் உள்ள சில செயலிகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு சிக்கி தவித்தது வருகின்றனர். கூகிளின் பிரபலமான மின்னஞ்சல் சேவை ஜிமெயில் உட்பட பல சேவைகள் இன்று  பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆண்ட்ராய்டு பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது பல ஜிமெயில் பயனர்கள் இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கேலக்ஸி எஸ் 21, கேலக்ஸி ஏ 50, கேலக்ஸி எஸ் 8, கேலக்ஸி ஏ 71, நோட் 20 அல்ட்ரா உள்ளிட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் அமேசான், ஜிமெயில் மற்றும் கூகிள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளைப் பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என புகார் தெரிவித்து வருகின்றனர்.

கூகுள் நிறுவனமும் ஆண்ட்ராய்டில் ஜிமெயிலுடனான சிக்கல்களை ஒப்புக் கொண்டுள்ளது. சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை டெஸ்க்டாப் பயன்படுத்த கூகிள் பரிந்துரைந்துள்ளது. தற்போது, ​​ஜிமெயில் செயலிழக்க என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ட்விட்டரில் ஜிமெயில் பயனர்களின் புகார்களைப் பார்த்தால், சிக்கல் பெரியது என்று தெரிகிறது. கூகிள் விரைவில் இந்த சிக்கலை சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை சரிசெய்ய சில வழிமுறைகளை வெர்ஜ் தகவல்களின் படி இங்கு பகிர்கிறோம்.

Here are the steps: Go settings > apps > tap the three dots in the top right corner > show system apps > search for Android System WebView > select Uninstall updates,” read a tweet from the official Samsung US support account (via The Verge).

author avatar
murugan