விருப்பப்பட்டு உறவு வைத்து கொண்டால் குற்றம் கிடையாது -உச்சநீதிமன்றம் அதிரடி !

திருமணம் ஆகாது நிலையில்  ஒரு பெண் , ஒரு ஆணுடன் விருப்பப்பட்டு உறவு வைத்து கொண்டால் பாலியல் வன்கொடுமை ஆகாது  என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

விற்பனை வரித்துறை துணை கமிஷனராக உள்ள ஒரு பெண் ,  சிஆர்பிஎஃப் அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி டி.ஒய். சந்திராசூட் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பெண் துணை கமிஷனரும் ,  சிஆர்பிஎஃப் அதிகாரியும் கடந்த 2008 முதல் 2014 வரை உறவில் இருந்து உள்ளனர்.இந்நிலையில் சிஆர்பிஎஃப் அதிகாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டதால் அப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடந்து உள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார். இதற்கு நீதிபதி ,  திருமணம் செய்வதாக வாக்குறுதி கூறிவிட்டு அதனை மீறுவதை தவறான வாக்குறுதி கூறி ஏமாற்றி விட்டதாக எடுத்து கொள்ள முடியாது என கூறினார்.

மேலும் திருமணம் நடப்பதற்கு முன்பாக விருப்பப்பட்டு உறவு கொள்வதை பாலியல் குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளித்தார்.

author avatar
murugan