நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் விலக்கு குறித்த மத்திய அரசின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினாலும் மறுப்பு தெரிவிக்கவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment