உலகின் சிறந்த 10 மறுசீரமைப்பு திட்டங்களில் இடம்பெற்ற இந்தியாவின் தூய்மை(நமாமி) கங்கை திட்டம்.!

உலகின் சிறந்த 10 உலக மறுசீரமைப்பு திட்டங்களில் இந்தியாவின் தூய்மை(நமாமி) கங்கை திட்டம் இடம்பெற்றுள்ளது.

இயற்கையை மீட்டெடுக்கும் உலக நாடுகளின் முயற்சியை ஐக்கிய நாடுகள் சபையானது அங்கீகரித்து வருகிறது. அதன்படி உலகம் முழுவதிலுமிருந்து 10 அற்புதமான இயற்கை சீரமைப்பு முயற்சிகளை அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கங்கை நதியை மீட்டெடுக்கும் தூய்மை(நமாமி) கங்கை திட்டமும் இடம்பெற்றுள்ளது.

ஐநாவின் பட்டியலில் இந்தியாவின் தூய்மை(நமாமி) கங்கை திட்டம் 4-வது இடம் பெற்றுள்ளது. பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய 3 நாடுகளின் காடுகளை பாதுகாக்கும் ட்ரை நேஷனல் அட்லாண்டிக் வன ஒப்பந்தம் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி கடல் மறுசீரமைப்பு திட்டமும், மூன்றாவது இடத்தில் ஆப்பிரிக்காவின் அமைதிக்கான பெரிய பசுமை சுவர் மறுசீரமைப்பு திட்டம் ஆகியவையும்  முக்கிய இடம்பெற்றுள்ளன.

author avatar
Muthu Kumar

Leave a Comment