ஆஹா! வெற்றிமாறனிடம் கதைக்கேட்ட விஜய்? தளபதி 69 அப்டேட்!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் தனது 68-வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி தனது ‘தமிழக வெற்றி கழகம் ‘ மூலம் அரசியல் வேளைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து இருந்தார் .

இந்நிலையில், தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து கொண்டே இருக்கும் நிலையை உறுதியான தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஒரு பக்கம் கார்த்திக் சுப்புராஜ் விஜயின் 69 படத்தை இயக்குவார் என்றும் மற்றோரு பக்கம் எச்.வினோத் இயக்குவார் எனவும் கூறப்பட்டு வருகிறது.

முத்தக்காட்சியில் எழுந்த சர்ச்சை! ‘ஃபைட்டர்’ படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விமானப்படை அதிகாரி!

இதனையடுத்து, தற்போது கிடைத்து இருக்கும் தகவல்கள் என்னவென்றால், தளபதி 69 திரைப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை சந்தித்து வெற்றிமாறன் கதை ஒன்றை கூறியிருந்தார்.

ஆனால், இருவருக்கும் தேதி பிரச்சனை காரணமாக இவர்கள் இருவரும் இணையும் படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலக இருக்கும் நிலையில், கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று விஜய் யோசித்து இருக்கிறாராம்.

எனவே, இயக்குனர் வெற்றிமாறனை அழைத்த விஜய் ஒரு கதை கூறியதாகவும் அந்த கதையும் விஜய்க்கு பிடித்துப்போக கிட்டத்தட்ட தளபதி 69 படத்தை இயக்குவதும் உறுதியாகிவிட்டது எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் யார் தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment