தென்மேற்கு பருவமழை இந்த தேதியில் துவங்க உள்ளதாம்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என தகவலை  வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என கூறியுள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் இருந்து கேரளாவில் பெய்ய ஆரம்பிக்கும். ஆனால், இந்த ஆண்டு ஐந்து நாட்கள் தாமதமாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட தேதியில் மழை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பருவமழையின் காரணமாக  மேற்கு தொடர்ச்சி மலை அருகில் உள்ள மாவட்டங்களில்  தற்போது நிலவி வரும் வறட்சி நீங்கும் என மக்கள் காத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

DINASUVADU 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment