வளர்ப்பு மகள் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி என தீர்ப்பு

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரை சேர்ந்தவர் சுக்ஜிந்தர்

By murugan | Published: May 16, 2019 08:10 AM

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரை சேர்ந்தவர் சுக்ஜிந்தர் சிங். இவருக்கு திருமணமாகி, 9 வயதில் அஷ்தீப் கவுர் என்ற மகள் உள்ளார். தனது மனைவியை பிரிந்த சுக்ஜிந்தர்சிங் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி அஷ்தீப் கவுர் வீட்டில் உள்ள குளியலறையில் பிணமாக கிடந்தார்.இதை பற்றி ஷம்தாய் அர்ஜூன் கூறுகையில் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக தெரிவித்தார். பின்னர் பிரேத பரிசோதனையில் அஷ்தீப் கவுர் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடந்து ஷம்தாய் அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான நேற்றைய விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் ஷம்தாய் அர்ஜூனை குற்றவாளி என கூறி நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் தண்டனை விவரம் பற்றி அடுத்த மாதம் 3-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc