அடடா…வித்தியாசமாக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் நீதிபதி – என்ன காரணம் கூறினார் தெரியுமா?

தேனி:ஆண்டிபட்டி பேரூராட்சியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நீதிபதி கையில் வாழைப்பூவுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள்,8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் இடப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.அதே சமயம்,இதுவரை 37518  வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 27,365 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் காலஅவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால்,அனைத்து மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி அலுவலகங்களில் இன்று வேட்புமனு தாக்கல் செய்வோர் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையில்,தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி பேரூராட்சியில் 14 வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நீதிபதி என்பவர்,கையில் வாழைப்பூவுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அவர் ஒரு கையில் வாழைப்பூவுடனும், மற்றொரு கையில் அவரது அப்பா பயன்படுத்திய கைத்தடியை பிடித்தபடியும் தலையில் தலைப்பாகை கட்டியும் வந்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்,அங்கிருந்த மற்ற வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும்,வாழைப்பூ கொண்டுவந்ததற்கு விளக்கம் இதுகுறித்து நீதிபதி கூறுகையில், “எனது தந்தை பயன்படுத்திய கைத்தடியை நான் வீர வாளாக கருதுகிறேன்.மேலும், மற்றும் ஒவ்வொரு குடும்பமும் வாழையடி வாழையாக உருவெடுத்து வருவதை குறிப்பிடவே வாழைப்பூவுடன் வந்துள்ளேன்.மக்கள் சேவை செய்வதில் நான் உங்களில் ஒருவனாக,உன்மைத் தொண்டனாக இருப்பேன்.எனவே மக்கள் என்னை  வெற்றி பெறச் செய்ய வேண்டும்”,எனக் கேட்டுக் கொண்டார்.

author avatar
Castro Murugan