மேல்தட்டு மக்களுக்கு இது பற்றியெல்லாம் கவலை இல்லை – தமிழருவி மணியன்

நிரந்தர வருமானம் இன்றி பரிதவிக்கும் மக்கள் மீது தன பங்குக்கு சுமையை ஏற்றுவது சரியா? என்று தமிழருவி மணியன் அறிக்கை.

சமீபத்தில் முன்பு இல்லாத அளவைவிட பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. இதற்கு அரசியலை தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமையல் எரிவாயு, உருளை பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.75 ஏற்றம் கண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. தினசரி விலை ஏறவில்லை என்றால் மட்டுமே ஆசிரியப்பட வேண்டும். மேல்தட்டு மக்களுக்கு இது பற்றி கவலையில்லை. அன்றாடங்க காய்ச்சிகளுக்கு தினசரி வாழ்க்கையே பெரும் போராட்டமாக இருக்கிறது. முறையான வேலைவாய்ப்பியின்றி, நிரந்தர வருமானம் இன்றி பரிதவிக்கும் மக்கள் மீது தன பங்குக்கு சுமையை ஏற்றுவது சரியா? என்று கேள்வி எழுப்பி, விலையேற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்