பெற்றோருக்கு கொரோனா -15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி…!

  • பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது பரவி வரும் நிலையில்,அரசு ஊழியர்களுக்கு பல்வேறு  நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில்,மத்திர அரசு ஊழியர்களின் பெற்றோர் அல்லது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால்,அந்த ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான சிறப்பு நேர்வு விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து,அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

  • மத்திய அரசின் ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,வீட்டில் தனிமையில் இருந்தால் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால்,அவருக்கு 20 நாட்கள் வரை,பயண விடுப்பு, எஸ்சிஎல் அல்லது ஊதியத்துடன் கூடிய விடுப்பு (EL) வழங்கப்படும்.
  • ஊழியருக்கு தொற்று உறுதியாகி 20 நாளுக்கு பிறகும் குணமடையாமல் மருத்துவமனையில் இருந்தால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான ஆவண ஆதாரங்களை காண்பித்த பின்னர் அவருக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும்.
  • ஊழியரின் பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால்,அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளிவரும் வரை அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான எஸ்சிஎல்-ஐத் தாண்டி  விடுமுறை அனுமதிக்கப்படும்.
  • இந்த உத்தரவானது கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.