ஊரக பகுதிகளுக்கு கூடுதல் மின்சாரம்.! முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மத்திய அமைச்சர்.!  

தேசிய சராசரியை விட ஊரக பகுதிகளுக்கு கூடுதல் மின்சாரம் வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர். 

தமிழகத்தில் கடந்த 2021 – 2022 காலகட்டத்தில் ஊரக பகுதிகளில் வழங்கப்படும் மின் விநியோக சராசரியானது 22 மணிநேரம் 15 நிமிடங்களாக பதிவாகியுள்ளது. இது தேசிய அளவில் ஊரக பகுதிகளில் வழங்கப்படும் மின் வழங்கல் சராசரியை விட அதிகமாகும்.

இதனை குறிப்பிட்டு, மத்தியஎரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் என தமிழக மின்சாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2021-2022 காலகட்டத்தில் தேசிய அளவில் ஊரக பகுதிகளில் வழங்கப்படும் மின் விநியோக சராசரியானது 20 மணிநேரம் 53 நிமிடங்களாக இருக்கிறது. அனால் தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கு மின் விநியோக சராசரியானது 22 மணிநேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதற்கு பாராட்டுக்கள் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் எனவும்,

அடுத்ததாக, தமிழக ஊரக பகுதிகளுக்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்கு உதவுதாகவும் மத்திய எரிசக்திதுறை அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதியளித்துள்ளார் என மின்சாரத்துறை வெளியீட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.