புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளது-நாராயணசாமி.!

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக இருக்கிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் திமுக நிர்வாகிகள் சிவா, சிவக்குமார் உள்ளிடோர்  ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம்.

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக இருக்கிறது என தெரிவித்தார்.

author avatar
murugan