விருமன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை 2 டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது என்பதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.

படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சில காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31-லிருந்து முன்னதாக, ஆகஸ்ட் 12- ஆம் தேதி வெளியாகும் என கார்த்தி ட்வீட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார். 31ஆம் தேதிக்கு முன்பே படம் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment