“மன் கீ பாத்” நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு கலை குறித்து பேசிய பிரதமர்..!

ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுகிழமை ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மக்களிடம் உரையாடி வருகிறார். அதன்படி, இன்று 69-வது முறையாக “மான் கி பாத்” நிகழ்ச்சியில் மோடி உரையாற்றி வருகிறார்.

அதில் பேசிய பிரதமர், புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தற்போது தற்சார்பு நிலையை எட்டியுள்ளனர் என தெரிவித்தார்.  மேலும், தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலை குறித்து மோடி பேசினார். இசையுடன் கதை சொல்லும் வில்லுப்பாட்டு முறை தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.  வில்லுப்பாட்டின் மூலம் புராண கதைகள் சொல்லும் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாரம் ஒரு நபர் வீதம் குடும்ப உறுப்பினர்களுக்கு கதைகள் சொல்லி மகிழலாம். கதை சொல்லுவது என்பது மிக அற்புதமான ஒரு கலை எனவும்  ஒவ்வொருவரின் வீட்டிலும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும். சுதந்திரப் போராட்டம் குறித்த விஷயங்களை, குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார்.

author avatar
murugan