பிரதமர் அவருடைய நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் கேட்பதில்லை : ராகுல்காந்தி

இந்திய பிரதமருக்கு மக்களின் தேவை என்ன என புரியவில்லை என ராகுல் காந்தி ட்வீட்.

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான குறைந்தபட்சம் 17.5 அதிகபட்ச வயது வரம்பு 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அக்னிபத்:இளைஞர்கள் நிராகரிப்பு, வேளாண்சட்டம்:விவசாயிகள் நிராகரிப்பு, பணமதிப்பிழப்பு:பொருளாதார அறிஞர்கள் நிராகரிப்பு, ஜிஎஸ்டி:வர்த்தகர்கள் நிராகரிப்பு, இந்திய பிரதமருக்கு மக்களின் தேவை என்ன என புரியவில்லை. காரணம் அவருடைய நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் கேட்பதில்லை’, என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment