பயிற்சி ஆட்டம் மழையால் தற்காலிகமாக நிறுத்தம்

உலகக்கோப்பை திருவிழா நெருங்கி வரும் நிலையில் அணிகள் எல்லாம் இங்கிலாந்தில் முகாம் இட்டு உள்ளது.

இதில் 10  அணிகள் பங்கேற்று விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.இந்த அணிகளுக்கு எல்லாம் தற்போது பயிற்சி ஆட்டம் துவங்கி உள்ளது.நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் விளையாடியது,மற்றும் ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதியது.இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற்றது.மேலும் இந்தியா  மற்றும் இங்கிலாந்துக்கு  முதல் ஆட்டமே சோதனையாக மாறியது.

இன்று  நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில்  தென் -ஆப்பிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் மோதுகிறது.மற்றுமொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் – பங்களாதேஷை கார்டன்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் -ஆப்பிக்கா அணி  8.2 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 55 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது.

மேலும் பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி கார்டன்ஸ் மைதானத்தில் நடக்க இருந்தது.அந்த போட்டியும் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது.

author avatar
kavitha

Leave a Comment