தடுப்பூசிக்கு பயந்து ஆதார் அட்டையுடன் மரத்தின் மேல் ஏறிய நபர்…!

கன்வர்லால் என்பவர், தடுப்பூசிக்கு பயந்து ஆதார் அட்டையுடன் மரத்தின் மேல் ஏறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தின் படங்கலன் கிராமத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்காக சுகாதாரத்துறை அந்த கிராமத்திற்கு சென்று உள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி மையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். அந்த கிராமத்தில் வசிக்கும் கன்வர்லால் என்பவர் தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார்.

ஆனால் தடுப்பூசி வழங்கப்படுவதை கண்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்துவிட்டார். மேலும் அவருக்கு தடுப்பூசி செலுத்த பயம் என்பதால், தடுப்பூசி மையத்திற்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி தடுப்பூசி முகாம் முடியும் வரை அங்கேயே இருந்துள்ளார். அவரது மனைவி தடுப்புசி எடுத்த ஒப்புக்கொண்ட போதிலும்,  அவர் தன்னுடைய ஆதரட்டையை மட்டுமல்லாது, தனது மனைவியின் ஆதார் அட்டையையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் கேள்விப்பட்ட பின், குஜ்னர் தடுப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜீவ் கிராமத்திற்கு சென்று அவருடன் பேசி அவருக்கான ஆலோசனை வழங்கினார். மேலும் இதுகுறித்து டாக்டர் ராஜீவ் கூறுகையில், ஆலோசனைக்குப் பின் அவருடைய தடுப்பூசி குறித்த பயம் நீங்கி விட்டது. அடுத்த முறை அவர்களது கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் போது, கன்வர்லால்  மற்றும் அவரது மனைவி தடுப்பூசி போடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.