கார்த்திக்கு வில்லியாக நடிகை சிம்ரன்..??

சர்தார் படத்தில் கார்த்திக்கு வில்லியாக நடிக்க சிம்ரன் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.

சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்நது நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு 70 % முடிந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 படத்தை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்குகிறார், படத்திற்கு சர்தார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு வில்லியாக நடிக்க பிரபல முன்னனி நடிகையான சிம்ரன் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சிம்ரன் தற்போது சியான் 60 திரைப்படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.