ஆளுநர் அராஜகப் போக்கிற்கு கிடைத்த சரியான பதிலடி – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையால் ஓரளவுக்கு ஆறுதல் என வைகோ கருத்து.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலையில் எந்த தொடர்பும் இல்லாதவர்களின் 30 ஆண்டு கால வாழ்க்கை மரண இருளிலே அழிந்தது. இந்த 30 ஆண்டு கால வாழ்க்கை திரும்ப வரப்போகிரதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் இந்த விடுதலையால் ஓரளவுக்கு ஆறுதல். இது ஆளுநருடைய அராஜக போக்கிற்கு கிடைத்த சரியான பதிலடி எனவும் குறிப்பிட்டார். மேலும், ஆளுநரை திருமபி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஆதரவளிக்கக் கூடிய தீர்ப்பு வந்துள்ளது. ஆளுநர் செய்யவேண்டிய கடமையை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது. ஆளுநர் வேண்டுமென்றே 6 பேரின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருந்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment