இன்று நடைபெறுகின்ற 116 தொகுதிகளில் இதுவரை பதிவான வாக்கு சதவீத விபரங்கள்

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதில் 2 கட்ட தேர்தல் முடிந்து உள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்த மூன்றாம் கட்ட தேர்தலில் கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் என  116 தொகுதிகளுக்கு  தேர்தல் நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி
  • அசாமில் 22.71 சதவீதம்
  • பீகாரில் 13.03 சதவீதம்
  • உத்தர பிரதேசத்தில் 10.88 சதவீதம்
  • கோவாவில் 12.83 சதவீதம்
  • குஜராத்தில் 10.48 சதவீதம்
  • திரிபுராவில் 14.02 சதவீதம்,
  • மேற்கு வங்காளத்தில் 16.85 சதவீதம்
  • சத்தீஸ்கரில் 13.81 சதவீதம்
  • மகாராஷ்டிராவில் 7.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
  •  ஜம்மு காஷ்மீரில் குறைந்தபட்சமாக 1.90 சதவீத வாக்குகள் பதிவாகியது.
author avatar
murugan

Leave a Comment