Categories: Srilanka

குண்டு வெடிப்பில் 35 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலியானவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது

நேற்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி பல தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது.  இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும்  தேவாலயம் என 7 இடங்களில் குண்டு வெடித்ததில் 150 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிறகு மாலையில் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டு வெடித்து. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்தது. மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இறந்தவர்களில் 35 பேர்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் காரணமாக இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.மேலும் பள்ளிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளித்தனர்.

இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்ததாகவும். குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் தற்கொலை படையை சேர்ந்தவர்கள்.

மேலும் இலங்கையில் வதந்தி செய்திகள் பரவாமல் இருக்க தொலைத்தொடர்புகள் மற்றும் வலைத்தளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதவிகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கு +94777903082 +94112422788 +94112422789 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

Recent Posts

நெய்யை யாரெல்லாம் எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிஞ்சுக்கோங்க.!

Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய…

2 mins ago

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை… தமிழக கனமழை நிலவரம்…

சென்னை: மே 22இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் தென் இந்திய…

16 mins ago

மே 27 வரை காத்திருங்க.. அறிமுகம் லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டாக வருகிறது Samsung Galaxy F55 5G.!

Samsung Galaxy F55 5G: நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி எஃப்55 5ஜி மொபைல் மே 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. தென்…

36 mins ago

கருப்பு உடையில் கலக்கல் மடோனா.. அந்த இடத்தில் சூப்பரான ‘டாட்டூ’.!

சென்னை : நடிகை மடோனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மடோனா அடிக்கடி தனது சமூக…

1 hour ago

அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் வடகொரியா.! கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு.!

சென்னை: அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனையை வடகொரியா அரசு அதிகரித்து வருகிறது. ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் என உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அடுத்தடுத்த…

1 hour ago

கடைசியாக ஒரு முறை மோதிக்கொள்ளும் தோனி – கோலி ? மனம் நெகிழ்ந்து பேசிய விராட் கோலி !

சென்னை : இன்று ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் மற்றும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான தோனியும், விராட் கோலியும் இணைந்து…

2 hours ago