இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பேர் கொரோனா தொற்றால் 37,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 907 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,03,16,897 ஆக அதிகரித்துள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 8 ஆயிரம் குறைந்துள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,03,16,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 907 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,97,637 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 56,994 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை2,93,66,601 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,52,659 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை  32,90,29,510 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
author avatar
Rebekal