மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு 4,086 பேர் சிகிச்சை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,086 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் பூஞ்சை தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பில் 4,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பால் இதுவரை 828 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றில் அதிகபட்சமாக நாக்பூரில் 1,395 பேருக்கும், புனே நகரில் 1,269 பேருக்கும், அவுரங்காபாத் நகரத்தில் 951 பேருக்கும், மும்பை நகரத்தில் 571 பேருக்கும், நாசிக் நகரத்தில் 568 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளது.