H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை குறைவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நயன் – விக்கி வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக விவரமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி மாணவர்களுக்கு 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் தொடர்ந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 300-க்கும் மேல் இருந்தது.

தற்போது 30க்கும் கீழ் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என தெரிவித்தார். மேலும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை வந்த பின் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment