நம்பர் முக்கியமல்ல.. நினைவுகள் தான் முக்கியம்.! விராட் கோலி நெகிழ்ச்சி.!

Virat Kohli : உங்கள் வாழ்வில் நீங்கள் திரும்பி பார்க்கும் போது நம்பர்களை விட நினைவுகள் தான் முக்கியம் என விராட் கோலி பேசினார்.

ஐபிஎல் தொடரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய டுபிளஸீஸ் தலைமையிலான பெங்களூரு அணியின் தொடக்க வீரர் விராட் கோலி அதிரடியாய் விளையாடினர்

விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இறுதியில் 19.2 ஓவரில் இலக்கை எட்டி பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்து விராட் கோலி பேசுகையில், ரன்கள் முக்கியமல்ல நல்ல நினைவுகள் தான் என பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், விளையாட்டில் எட்டப்படும் சாதனைகள், அதன் புள்ளிவிவரங்கள், ரன்கள் போன்றவற்றை பற்றி மக்கள் நிறைய விஷயங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் வாழ்வில் திரும்பி பார்க்கும்போது உங்களை உருவாக்கிய நினைவுகள் தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

நான் பெற்ற அன்பு, பாராட்டு மற்றும் ஆதரவு நிச்சயம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனை நான் அவர்களுக்கு எனது விளையாட்டின் மூலம் திருப்பி தர முயற்சி செய்கிறேன். அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தை கொடுக்க வேண்டும். ஒருவேளை விக்கெட்டுகள் விழுந்தால் ஆட்டத்தை கணித்து நிதானமாக விளையாட வேண்டும்.

ஆட்டத்தை நான் கடைசி வரை நின்று முடிக்க நினைத்தேன். ஆனால், முடியவில்லை. நான் விளையாடும் முறை அனைவருக்கும் நன்கு தெரியும். மற்ற வீரர்கள் நன்றாக கவர் டிரைவ் செய்ய வேண்டும். எதிரணியினர் அதனை தடுத்து விடுவதிலேயே குறியாக இருப்பார்கள். அதனால் அதற்கான திட்டம் வகுத்து விளையாட வேண்டும். தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டை விளம்பரப்படுத்துவதற்கு எனது பெயர் பல்வேறு இடங்களில் பயன்படுவது எனக்கு தெரியும். டி20 கிரிக்கெட்டில் இந்த பெயர் இன்னும் அதிகமாக எனக்கு அது கிடைத்துள்ளது என வெற்றிக்கு பின்னர் அட்ட நாயகன் விராட் கோலி உரையாற்றினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.