#BREAKING:என்.பி.ஆர் நிறுத்திவைக்கப்பட்டதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் -ஸ்டாலின்..

என்பிஆர் கணக்கெடுக்கும் பணி துவங்க வேண்டும் என பல மாநிலங்களில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையெடுத்து தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புவருகின்ற ஏப்ரல் 01-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் 2002 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட என்.பி.ஆர் விட 2020-ல் எடுக்கப்படும் கணக்கெடுப்பில் 3 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 3 அம்சங்கள் தான் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.அந்த மூன்று கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

இதையெடுத்து நேற்று அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு போது , தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காத நிலையில் தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று சட்டபேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.

இதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார் என்பிஆர் நிறுத்திவைப்பு என்பது புதிய அறிவிப்பு இல்லை; பேரவையில் கூறியதையே செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தேன். இதில் உரிமை மீறல் எதுவும் இல்லை என கூறினார்.