புதிய புயலுக்கு பெயர் “மாண்டஸ்”! ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரை!

வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் பெயர் வைக்கப்படுகிறது.

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த மாண்டஸ் பெயர் வைக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் 7ம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், டிசம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment