வாக்குறுதி அளித்தபடி உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் – கனிமொழி!

மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில் தற்பொழுது ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 40 இடங்களில் நடைபெறக்கூடிய இந்த அகழ்வுப் பணிகள் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட மண்பாண்டங்கள், கருவிகள் எலும்புக்கூடுகள் ஆகியவற்றையும் மீதமுள்ள பணிகள் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டுள்ளனர்.

அதன் பின்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள கனிமொழி, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி பணிகளை நானும் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அனிதா R. ராதாகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் பார்வையிட்டோம். மீதமுள்ள இடங்களில் அகழாய்வு நடத்தப்பட வேண்டும். முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும். வாக்குறுதி அளித்தபடி மத்திய அரசு உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal