இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவிக்க ஐபிஎல் நிர்வாகமே காரணம் -அப்ரிடி குற்றசாட்டு…!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற 27 -ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை 3 டி20 , 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்கவில்லை என இலங்கை அணியின் டி20 கேப்டன் மலிங்கா உட்பட 10 பேர் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தன.

அவர்கள் இல்லாமல் லஹிரு திரிமன்னா, துஷான் ஷனகா தலைமையில் ஒருநாள், டி20 அணிகளை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் பாகிஸ்தானில்  இலங்கை அணி விளையாடுமா? விளையாடாத என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டபடி இலங்கை அணி பங்கேற்கும் என அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி பாகிஸ்தான் நடைபெறும் தொடர்களில் இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவிப்பதற்கு முக்கிய காரணமே ஐபிஎல் நிர்வாகம் என கூறியுள்ளார். பாகிஸ்தானில் விளையாடினால்  ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என ஐபிஎல் நிர்வாகம் மிரட்டியுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் பீரிமியர் லீக்கில் இலங்கை வீரர்கள் விளையாட வைப்பதற்காக நான் சென்ற முறை இலங்கை வீரர்களிடம் பேசினேன். அப்போது அவர்கள்   விளையாட அதிக ஆர்வமாக இருந்தார்கள் என கூறினார்.

 

author avatar
murugan