கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி தொடரை கைப்பற்றியது !

இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ் ,கிறிஸ் கெய்ல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே அதிரடியான ஆட்டத்தை  தொடங்கினர். சிறப்பாக விளையாடிய எவின் லூயிஸ் 29 பந்தில் 43 ரன்கள் குவித்தார்.

Image

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டை 115 ரன்னில் இழந்தது.பின்னர் ஷாய் ஹோப் களமிறங்கினர்.அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டத்தால் 41 பந்தில் 71 ரன்கள் குவித்தார்.

Image

ஷாய் ஹோப் , ஹெட்மியர் இருவரும் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்தபோது 22 வது ஓவரில் மழை பெய்ததால் போட்டி 35 ஓவராக குறைக்கப்பட்டது.பின்னர் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதியாக 35 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 240 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில் கலீல் முகமது , ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர்.டக்வெர்த் முறைப்படி இந்திய அணிக்கு 255 ரன்கள் குவித்தது.256 இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரோஹித் 10 ரன்னில் அவுட் ஆனார் .

Image

பின்னர் கோலி களமிறங்கினர்.ரோஹித் தொடந்து தவான் 36 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பிறகு நிலைத்து நின்ற கோலி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.அடுத்து இறங்கிய ரிஷாப் பண்ட ரன்கள் எடுக்கலாம் வெளியேறினர்.

கோலி ,ஸ்ரேயாஸ் இருவரும் கைகோர்த்தனர்.அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் 41 பந்தில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதனமாக விளையாடிய கோலி 99 பந்தில் 114 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

Image

இறுதியாக இந்திய அணி 32.3ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 256 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் மீதம் இருந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல்  டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடக்க உள்ளது.

author avatar
murugan