லாரியில் விமானத்தை ஏற்றி செல்லும் போது நடந்த சம்பவம்.! பொதுமக்கள் அதிர்ச்சி.!

  • மேற்குவங்கத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்று விற்கப்பட்டது.
  • விமானத்தை உடைத்து விற்பனை செய்ய ஏற்றிச் சென்று போது மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய லாரி , நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்றை விற்கப்பட்டு பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவர் அந்த விமானத்தை உடைத்து விற்பனை செய்ய விலைக்கு வாங்கியுள்ளார்.

பின்னர், அதை எடுத்து செல்வதற்காக லாரி ஒன்றில் ஏற்றி சாலை வழியாக துர்காபூர் வழியாக சென்றபோது, ஒரு மேம்பாலத்தின் கீழ் லாரி சிக்கிக் கொண்டது. இதனால் அப்பகுதியில் வெகுநேரம் போக்குவரத்து பாதித்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நீண்ட நேர முயற்சி பண்ணி இறுதியாக ஒரு போராட்டத்திற்கு பிறகே லாரியின் நடுப்பகுதி உள்ள சக்கர டயர்கள் கழட்டப்பட்டு, பின்னர் முன்பகுதியில் கயிறு கட்டி மற்றொரு லாரியுடன் இணைத்து இழுத்து அந்த லாரியை மீட்பு துறையின் மூலம் மீட்கப்பட்டனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்