வட்டத்தில் நின்று காய்கறி வாங்கும் பொது மக்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கடைகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நெல்லையில், தியாகராஜநகர் உழவர் சந்தையில், சமூக விலகல் கடைபிடிக்கும் வகையில் மூன்று அடிக்கு வட்டம் வரைந்து காய்கறி வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தைக்கு வந்த ஒவ்வொருவரும் கடைக்கு முன்பாக போடப்பட்ட வட்டத்திற்குள் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.