காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் பண்ணை வீட்டில் காட்டு விலங்குகள்.! வனத்துறையினர் மீட்பு.!

கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பண்ணைவீட்டில் வன விலங்குகளை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

பெங்களூருவில் மான் தோல், மான் கொம்பு, எலும்பு ஆகியவற்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனுக்கு சொந்தமான பண்ணை வீட்டு ஊழியர் செந்தில் கைது செய்யப்பட்டார்.

செந்தில் கொடுத்த வாக்கூமூலத்தின் அடிப்படையில் தாவணகெரேவில் (Davanagere) உள்ள மல்லிகார்ஜுனுக்கு சொந்தமான பண்ணைவீட்டில் கர்நாடக வனத்துறை மற்றும் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அதிகாரிகள் கடந்த புதன்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர்.

அங்கு நடைபெற்ற சோதனையில், சுமார் 29 வன விலங்குகளை மீட்டனர். வனத்துறை அதிகாரிகளின் கூறியதன்படி, பண்ணை வீட்டில் 10 கரும்புலிகள், ஏழு புள்ளிமான்கள், ஏழு காட்டுப்பன்றிகள், மூன்று முங்கூஸ்கள் மற்றும் இரண்டு குள்ளநரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுபற்றி, முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனா கூறுகையில், கடந்த 2000 ஆண்டு முதல் எங்கள் பண்ணை வீட்டில் நாங்கள் மான்கள் வளர்த்து வருகிறோம். அதனை பராமரிக்க தான் ஊழியர்களை நியமித்தோம். இந்த செயல் எங்களுக்கு தெரியாமல் நடந்துள்ளது. இதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment