ஜெய்குமாருக்கு எதிராக திமுக வழக்கறிஞர் அணி சார்பாக புகார்….

  • திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக தேர்தல் அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகளை விதித்துள்ளது. மேலும், இதுவரை நடத்தப்பட்ட வகையான சோதனையில் பல கோடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பின் போது, அதிமுக – வுக்கு வாக்களித்தால் ரூ.1500 கிடைக்கும் என பேசியதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, பேட்டியளித்த அமைச்சர் இவ்வாறு கூறியதாக  புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment