விறுவிறுப்பான வாக்குப்பதிவு… 11 மணி நிலவரப்படி தமிழக நிலவரம் இதோ….

Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையில், 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், அடுத்ததாக 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 23.72 சதவீத வாக்குகள் தற்போது வரையில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன்,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன்,  சீமான் , நடிகர்கள், ரஜினிகாந்த் , கமல்ஹாசன், அஜித், தனுஷ் , விஜய் சேதுபதி என பலரும் காலையிலேயே தங்கள்  ஜனநாயக கடமையை தவறாமல் வாக்களித்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.