கொரோனாவாக் கோவிட் -19 தடுப்பூசி : 50% – 90% வெற்றி!

சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய கொரோனாவாக் கோவிட் -19 தடுப்பூசி பிரேசிலிய சோதனைகளில் 50% முதல் 90% வரை வெற்றி.

உலக முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய கொரோனாவாக் கோவிட் -19 தடுப்பூசி பிரேசிலிய சோதனைகளில் 50% முதல் 90% வரை வெற்றி கண்டுள்ளதாக சாவ் பாலோவின் மாநில சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தடுப்பூசியின் சோதனை முடிவுகள் ஜனவரி 7 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று பிரேசில் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இறுதி முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பு நிறுவனம் தரவை மதிப்பாய்வு செய்யும் என சினோவாக் தெரிவித்துள்ள நிலையில், ஜனவரி 7 ஆம் தேதிக்குள் புட்டன்டான் வெளியிடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.