கொரோனா தடுப்பூசி 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட போடப்படவில்லை – மத்திய சுகாதாரத்துறை

கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார் அவர்கள் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே  அவர்கள் பதிலளித்துள்ளார் .

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 9ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 62 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 59 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியு,ம் 3 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.