#Breaking:ஆயுள் கைதிகள் விடுதலை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை:ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ரவிச்சந்திரன் சிறைதண்டனை பெற்று வரும் நிலையில்,முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.இந்த நிலையில்,ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனிப்பட்ட சுதந்திரம்:

இதனிடையே,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழக அமைச்சரவை முடிவின் அடிப்படையில் விடுதலை செய்யக் கோரிய நளினி மனுவை பட்டியலிட பதிவுத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த 42 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காததால் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது என நளினி புகார் மனு அளித்துள்ள நிலையில் அவர் மனுவை பட்டியலிட பதிவுத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.