#BigBreaking:புதிய வகை கொரோனா பரவும் அபாயம் – மத்திய அரசு போட்ட உத்தரவு!

உலக நாடுகளை அச்சுறுத்தும் XE என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள்,அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில்,புதிய வகை XE என்ற கொரோனா பாதிப்பு தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே,நாடு முழுவதும் புதிய வகை கொரோனா வருகின்ற ஜூன் மாதத்தில் அதிக அளவில் பரவும் அபாயம் உள்ளதாக தமிழக சட்டப் பேரவையில் எம்எல்ஏ சி.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,இந்த புதிய வகை XE என்ற கொரோனா மற்ற கொரோனா திரிபுகளை விட 10 மடங்கு வேகமாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.