காவி உடை… சர்ச்சைக்கு உள்ளான ஷாருக்கான் பட பாடல்.! வெட்டி தூக்கிய தணிக்கை குழு.!

பதான் படத்தில் பேஷ்ரம் ரங் எனும் பாடலில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட உத்தரவிட்டுள்ளதாக தணிக்கை வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார் .  

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் ஜனவரி மாதம் இறுதி வரம் திரைக்கு வர உள்ளது . அப்படத்தில் இருந்து அண்மையில் பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது

அந்த பாடலில் கதாநாயகி தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். அதிலும் குறிப்பாக பாடலில் காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியது மத சர்ச்சைகளை கிளப்பியது. வட மாநிலங்களில் பலத்த எதிர்ப்புகள் இந்த பாடலுக்கு உருவானது.

இதனை அடுத்து, தற்போது இந்த பாடலில் இருந்த காவி உடைகள் இருக்கும் காட்சிகளை மாற்றி படமாக்க அல்லது அதனை நீக்க வேண்டும் என மத்திய தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தணிக்கை வாரிய நிர்வாகி பிரசூன் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment