திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி  தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனால்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி  அமமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால்  அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பிரச்சாரத்தை முதலாவதாக  தொடங்கினார் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி.மேலும் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி வழக்குதொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 30,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

author avatar
murugan

Leave a Comment