இன்று முதல் இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்திய பிரிட்டன் அரசு! மீறினால் அபராதம்!

இன்று முதல் இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்திய பிரிட்டன் அரசு.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இதுவரை உலக அளவில் 15,656,884 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 636,576 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாத்தில் முதல் மூன்று இடங்களில், அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளது.

கொரோனாவின் தீவிர பரவலால், மக்கள் வெளிய வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோரையும் கொரோனா தொற்று விட்டுவைக்காத நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை பிரிட்டன்  அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இங்கிலாந்தில் இன்று முதல், பொது மக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.