கோலாகலமாக தொடங்கிய தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 440-வது திருவிழா..!

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

ஒவ்வொரு வருடமும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி  விழா நடைபெற்றது.

இதனையடுத்து, இந்த ஆண்டு திருவிழாவானது வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவிழா பத்து நாட்கள் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவையொட்டி ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment